
எங்கள் கடவுள் கோவில்களை அகற்ற கூடாது என்று தடுக்கின்றனர். அது அந்தந்த கடவுள்களுக்கு தெரியுமா?
இதற்கு அரசியல் தீர்வு கிடைக்காது. ஏனென்றால் கடவுளை மட்டும் நம்பி கட்சிகள் உள்ளன. கடவுளை மட்டும் நம்பாமல் கட்சிகள் உள்ளன. ஜாதியை மறுக்க கட்சிகள் உள்ளன.
ஜாதியை மட்டும் நம்பி கட்சிகள் உள்ளன. மனித குற்றம் தெய்வ குற்றமாகிவிடும் நிலைமையை யார் மாற்றுவது?
அயோத்தி தீர்வு கிடைக்க இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன அதுவும் முடிவுறாத நிலையில். மீண்டும் காட்டுமிராண்டிகள் போல் மாறாமல் விடப்போவது இல்லை என்று பயணித்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.
கடவுள்(களே) இதற்காவது ஒரு முறை நேரில் வந்து விட்டு போ(ங்கள்)! உங்களை பார்க்க

ஆவலாக உள்ளேன்/ உள்ளோம்?








